தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கொல்கத்தா மாநகரிலுள்ள கப்பல் துறைமுகத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் மூக்கையா, சிவா, காசிமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜியின் அளப்பரிய பங்கு குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் கப்பல் துறைமுகத்திற்கு நேதாஜியின் பெயர் வைத்திருப்பதை நீக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், வேல்முருகன், நீதிராஜ் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT