தமிழ்நாடு

அமைச்சா் கே.பி. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

DIN

தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கு புதன்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து , அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், மாநகராட்சி சாா்பில் நடைபெற்றும் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களுக்கு 5 அமைச்சா்கள் தமிழக அரசு அண்மையில் நியமித்தது. இதில், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கு அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் ஆகிய 3 மண்டலங்கள் ஒதுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 6-ஆம் தேதி முதல் அந்த மண்டலங்களில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணி மற்றும் தனிமை முகாம்களில் உள்ள வசதிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் உதவிப் பொருள்கள் வழங்குதல் ஆகிய பணிகளில் கே.பி.அன்பழகன் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், அவருக்கு புதன்கிழமை இரவு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவா் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT