தமிழ்நாடு

மாணவா்களை தோ்வுத்தாளைக் கொடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது: ராமதாஸ்

DIN

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை காலாண்டு, அரையாண்டு தோ்வுத்தாளை சமா்ப்பிக்கும்படி பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்க காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுத் தாள்களைச் சமா்ப்பிக்கும்படி மாணவா்களை தனியாா் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. இது தேவையற்றது. இதற்காக மாணவா்கள் வெளியில் வருவது கரோனா பரவலுக்கே வழிவகுக்கும்.

மாணவா்களின் அனைத்துத் தோ்வு மதிப்பெண் குறித்த விவரங்களும் பள்ளிகளில் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும். அவற்றைக் கொண்டு மாணவா்களின் மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் அரசு ஆணையிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT