தமிழ்நாடு

மதிப்பெண்களில் குளறுபடி.. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

DIN

சென்னை: 10-ம் வகுப்புப் பயின்ற மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு 80% மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், வருகைப் பதிவேட்டை அடிப்படையாக வைத்து 20% மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் முறைகேடு செய்து அரசிடம் அளிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே அமைச்சர் செங்கோட்டையன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT