தமிழ்நாடு

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா பாதிப்பு இல்லை: அப்பல்லோ அறிக்கை

DIN

சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதியானதாக ஞாயிறன்று தகவல்கள் பரவத்துவங்கின.

இதையடுத்து அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை, அமைச்சர்  சி.வி. சண்முகத்தின் கரோனா பரிசோதனை முடிவை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 19 ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும் அதில் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்ததாகவும் அறிக்கைகளுடன் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளதாக, அப்போலா மருத்துவமனை ஞாயிறு இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முந்திய அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT