முகப்பு
தமிழ்நாடு

ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியது: சென்னையில் மண்டலவாரியாக விவரம்

சென்னையில் ராயபுரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

சென்னையில் ராயபுரத்தில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  அதன்படி, சென்னையில் இதுவரை 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 559 பேர் உயிரிழந்துள்ளனர். 21,796 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,148 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து தண்டையார்பேட்டையில் 4,963 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4,785 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →