தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் வார்டுதோறும் தலா 2 மருத்துவ முகாம்கள்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

DIN

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு நாள் முடிவில் மாநகராட்சிக்கு அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்.

சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மாநகரம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 

மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் ஒரு புதிய திட்டத்தை தொடங்கவுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT