கோப்புப்படம் 
தமிழ்நாடு

தடை உத்தரவு மீறல்: சென்னையில் 4 நாட்களில் 17,865 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக  வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திங்கள் மாலை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 7,524 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 4 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 16,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT