முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டில் இன்று மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
confirmed cases of infection in Chengalpattu Corona
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். திங்கள்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 116 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,861 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →