தமிழ்நாடு

நிழல் தரும் மரங்கள் பராமரிப்பிற்கு ஜெயண்ட்ஸ் குழு அமைப்பினர் ரூ.5000 நன்கொடை

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலைய வளாக நிழல் தரும் மரங்கள் பராமரிப்பிற்கு ஜெயண்ட்ஸ் குழு அமைப்பினர் சார்பில் ரூ.5000 நன்கொடையானது ரயில் நிலைய  அதிகாரியிடம் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தின் முன்புறம் சுமார் 20க்கு மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், பசுமையைப் பேணும் பொருட்டு வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழைப் பொழிவு குறைவானதாலும், அதிக வெயில் காரணமாகவும், பராமரிக்க உரிய பணியாளர்கள் பற்றாக்குறையாலும் அவற்றில் சில மரங்களின் கிளைகள் வாடிப்போய் காய்ந்துவிட்டன. 

இதையறிந்த ஜெயண்ட்ஸ் குழு அமைப்பினர் அம்மரங்களை போதிய நீர் விட்டுப் பராமரிக்க ஏற்பாடு செய்தனர். இதன்படி லாரி மூலம் நீரை விலைக்கு வாங்கி மரங்களுக்குத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பராமரிக்க ரயில் நிலைய அதிகாரியிடம் ரூ.5 ஆயிரத்திற்கான நன்கொடையை ஜெயன்ட்ஸ் குழு அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா அமைப்பு இயக்குநர் திருவண்ணாமலை தலைமையில் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கப்பட்டது.

உடன் அவ்வமைப்பின் அருப்புக்கோட்டை கிளைத் தலைவர் எஸ்.ஏ, சாதலி, செயலாளர் கே.இராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோரும், பிற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT