இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கருப்பசாமி நியமனம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக கருப்பசாமி பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக(எஸ்.பி) கருப்பசாமி பொறுப்பேற்றுள்ளார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆவார்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம். இந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மது. இவர் கோட்டயம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருவடைந்தபுரத்தில் மாநகர காவல் துணை ஆணையாளராக பணியாற்றிய கருப்பசாமி இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜூன் 21ல் பொறுபேற்றுக்கொண்டார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தத்தது.
Advertisement
Advertisement
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ஒரு தமிழர் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.