மும்பையில் 70 கரோனா நோயாளிகள் மாயம் 
தமிழ்நாடு

மும்பையில் 70 கரோனா நோயாளிகள் வரை மாயம்; விசாரணை தீவிரம்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மும்பையைச் சேர்ந்த 70 கரோனா நோயாளிகள் மாயமாகியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ENS


மும்பை: கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மும்பையைச் சேர்ந்த 70 கரோனா நோயாளிகள் மாயமாகியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் பொதுமக்களின் உதவியையும் மாநகராட்சி கோரியுள்ளது.

மும்பையின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் பிரிஹன்மும்பை மாநகராட்சியின் மலட் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தங்களது செல்லிடப்பேசியை அணைத்து வைத்திருப்பதால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் மட்டும் கரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை எட்டிவிட்ட நிலைடியில், மாநகராட்சி அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை நடத்தி, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாயமான நோயாளிகளின் செல்லிடப்பேசி எண்கள், ஆதார் எண் மற்றும் இதர விவரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் மூடுலம் அவர்கள் நோயாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது அவர்களிடம் இருந்து பெற்றப்பட்ட விவரங்கள் இவை. 

இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று தெரிய வந்துள்ளதால், இவர்கள் மும்பையில் இருக்கிறார்களா அல்லது அவர்களது ஊர்களுக்குத் திரும்பி விட்டனரா என்பதும் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

இதற்கிடையே ஜல்கோன் பகுதியில் கரோனா உறுதி செய்யப்பட்ட 82 வயது பெண்மணி 8 நாள்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையின் கழிவறையில் அவர் சலடமாகக் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

"ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயம்தானா?' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களாட்சியின் தாய் இந்தியா!

SCROLL FOR NEXT