முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா பரவலினால் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி, தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.