தமிழ்நாடு

போலி இ-பாஸ்: சென்னையில் தலைமைச் செயலக ஊழியர் உள்பட 5 பேர் கைது

DIN

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்ததாக தலைமைச் செயலக ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி ஊழியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் என 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுக்க ரூ. 3,000 முதல் ரூ.5,000 வரை மக்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, போலி இ-பாஸ் மூலம் பொதுமக்கள் வெளியே செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT