முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் காவலர்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

Updated On : 24 ஜூன், 2020 at 5:40 PM
சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கரோனா பரவல் துவங்கிய நேரத்தில் தடுப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட  காவல்துறையினருக்கு சூரியம்பாளையம் பகுதி கழக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. 42 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பொருள்களை பகுதி கழக செயலாளர் பழனிசாமி, நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

Advertisement

நிகழ்ச்சியில் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மேகஸ்வரன், நெசவாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் குமரேசன், கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவர் கணேஷ்குமார், ஜாேதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.