வட்டாட்சியர் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்கள். 
தமிழ்நாடு

சங்ககிரி வட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். 

DIN

சேலம் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். 

கரோனா தொற்று பணியில் மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு தமிழகரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி வட்டக்கிளையின் நிர்வாகி ரமேஷ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில்  அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். 

இதனையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். இப்போராட்டம் ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி மூன்று நாள்கள் நடத்த உள்ளனர். ஜூன் 26ம் தேதி மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT