தமிழ்நாடு

சென்னை ராயபுரத்தில் 6,837 பேருக்கு கரோனா; மண்டல வாரியாக நிலவரம்

DIN


சென்னை: சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் இன்று காலை நிலவரப்படி 6,837 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பற்றிய அறிவிப்புகளை மாநில சுகாதாரத் துறை நேற்று மாலை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,865 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 45,814-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும் உயா்ந்தது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பாதிப்பு எண்ணிக்கை 41,172-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை 1,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 44,205-ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 26,472 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 18,673 போ் சிகிச்ச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 668 போ் உயிரிழந்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT