தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜு

DIN

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிமுறைகளைச்  சொல்கிறதோ அவற்றை அமல்படுத்த அரசு தயாராக இருக்கிறது என்று எட்டயபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கட்டட தொழிலாளி கணேசமூர்த்தியின் வீட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

மேலும் கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமிக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி வருவாய்த் துறை அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, 
சாத்தான்குளம் சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.  மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் விடியோ பதிவுகளுடன் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து அரசு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

உடற்கூறு ஆய்வு அறிக்கையினை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பிறகு நீதிமன்றம் என்ன வழிமுறைகளை சொல்கிறதோ அதை அமல்படுத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளது என்றும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT