தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

DIN


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,841 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 108 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 62 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -18) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு நோய் பாதிப்பு இல்லாமல் பலியானவர்கள் 11 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 37,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,40,441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT