தமிழ்நாடு

பாடப்புத்தகங்கள் குறைப்பு: 10, 11, 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மாற்றம்

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்பட முடியாத சூழ்நிலை நிலவுவதால், வரும் கல்வியாண்டில் பாடப்புத்தங்கள் குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொதுமுடக்கம் காரணமாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கரோனா பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் குறையாததால், பள்ளிகளைத் திறக்க மேலும் கால தாமதம் ஆகும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. 

அதன்படி, 10-ஆம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்துக்கு இரண்டு புத்தகங்கள் உள்ள நிலையில் வரும் கல்வியாண்டில் ஒரே புத்தகமாக இருக்கும். 

அதேபோன்று, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களைத் தவிர மற்ற பாடங்கள் ஒரே புத்தகத்தைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT