தமிழ்நாடு

செங்கல்பட்டில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: இன்று மேலும் 152 பேருக்குத் தொற்று

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை புதிதாக 152 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 152 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 5,394  ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT