FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெண்களை ஏமாற்றிய விவகாரம்: காசியின் தந்தை கைது 

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On : 30 ஜூன் 2020, 6:11 pm IST
பகிர்:

நாகர்கோவில்: குமரியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி (26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களை தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி அவர்களோடு தனியாக இருக்கும் படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பெண்களும் ஒரு இளைஞரும் அளித்த புகாரின் பேரில் ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் வழக்குகள் ஒரு கந்து வட்டி வழக்கு என 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

Advertisement

Advertisement

இதற்கிடையே  காசியின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments