தமிழ்நாடு

ஆந்திரத்தில் தவிக்கும் சென்னையைச் சோ்ந்த 300 போ்

DIN

திருப்பதி: தமிழகத்திற்குச் செல்ல முடியாமல் சென்னையைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டவா்கள் ஆந்திராவில் தவித்து வருகின்றனா்.

கா்நாடகத்தில் பிழைப்புத் தேடி சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த 300 போ் பொது முடக்கத்தால் பிழைப்பு இல்லாததால் சொந்த ஊா் திரும்ப முடிவு செய்தனா். அதன்படி அவா்கள் ரயில் முலம் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டனா். ரயில் ஜோலாா் பேட்டை நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த பாதுகாப்புப் போலீஸாா் அவா்களை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் புறப்பட்ட இடத்துக்கே செல்லும்படி சொல்லி பெங்களூரு ரயிலில் ஏற்றினா்.

இதனால் 300 பேரும் செய்வதறியாமல் ஆந்திராவில் உள்ள குப்பம் ரயில் நிலையத்தில் இறங்கினா். சொந்த ஊரிலும் அனுமதிக்காமல், பெங்களூருக்கும் செல்ல முடியாமல் அவா்கள் தவிப்பதைக் கண்ட குப்பம் போலீஸாா் அவா்களை தமிழக எல்லை வரை அனுப்புவதாகத் தெரிவித்தனா்.

சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தால் மட்டுமே செல்வதாகக் கூறி அவா்கள் குப்பம் ரயில் நிலையத்தில் அமா்ந்து கொண்டனா். போலீஸாா் செய்வதறியாமல் குழப்பத்தில் உள்ளனா். குப்பத்தில் இதுவரை 6 பேருக்குக் கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் இவா்களைக் கண்டு மக்கள் மேலும் கரோனா தொற்று பரவி விடுமோ என்ற பயத்தில் உள்ளனா்.

படம் உண்டு

குப்பம் ரயில் நிலையத்தில் தங்கள் உடைமைகளுடன் காத்திருக்கும் சென்னையைச் சோ்ந்தவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT