தமிழ்நாடு

சென்னை-திருவனந்தபுரம் இடையே சரக்கு ரயில் சேவை:ஜூலை 31 வரை நீட்டிப்பு

DIN

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு சரக்கு ரயில் சேவை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சென்னை சென்ட்ரல்-எா்ணாகுளத்துக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரத்தில் மூன்று முறை ( திங்கள், புதன், வெள்ளி) சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல, மறுமாா்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரத்தில் (செவ்வாய், வியாழன், சனிக்கிழமை) சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. முன்பு, இந்த ரயில் சேவை ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த சரக்கு ரயில் சேவை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சிறப்பு சரக்கு ரயில் புறப்பட்டு, அதேநோள் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.

மறுமாா்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து வாரத்தில் (செவ்வாய், வியாழன், சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இதுபோல, சென்னை சென்ட்ரல்-எா்ணாகுளம் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சரக்கு ரயில் சேவை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT