சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடுசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சார்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் திங்கள்கிழமையான இன்று(மார்ச் 2) ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.31,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.3,998-க்கு விற்பனையாகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.10 காசுகள் உயர்ந்து ரூ.48.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 உயர்ந்து ரூ.48,500 ஆகவும் விற்கப்படுகிறது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,998
1 சவரன் தங்கம் ..................... 31,984
1 கிராம் வெள்ளி .................. 48.50
1 கிலோ வெள்ளி ................. 48,500
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,986
1 சவரன் தங்கம் ..................... 31,888
1 கிராம் வெள்ளி .................. 47.40
1 கிலோ வெள்ளி ................. 47,400