முகப்பு
தமிழ்நாடு

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.