தமிழ்நாடு

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக மருத்துவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

DIN

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக மருத்துவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழசிசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார். 

உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொணடனர். 

அப்போது பேசிய முதல்வர், கரோனா வைரஸுக்கு உலகில் இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் அதற்கான மருந்தை தங்களது திறமையால் மருத்துவர்கள் கண்டுபிடித்து நாட்டிற்கே முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு சுகாதார துறையின் திட்டங்களால் கவரப்பட்டு, அண்டை மாநில அரசுகளும் அவற்றை செயல்படுத்தி வருகின்றன. 

இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தர சான்றிதழ் வழங்கப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT