ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. குற்றவாளி: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என தீர்ப்பு.வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பியாக இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.