முகப்பு
தமிழ்நாடு

மார்ச் 6-ல் விழுப்புரத்தில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 6-ம் தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
state wide fast in vilupuram
பகிர்:

சிதம்பரம்: தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 6-ம் தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது

சிதம்பரத்தில் புதன்கிழமை அன்று  தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நியாயவிலைக்கடைகளுக்கு தனித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், நூறு சதவீத கணினி மயம், பயோ மெட்ரிக் குடும்ப அட்டை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

Advertisement

மேலும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு முறையான தேதியில் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  குறித்து தமிழகஅரசு ஒரு விசாரணைக்குழு அமைத்தது. விசாரணை முடிவுற்று அக்குழு 31-12-2018-ல் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் ஓராண்டாகியும் குழுவின் அறிக்கையும் வெளியிடவில்லை. கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 6-ம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. நடைபெறுகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் அடுத்த கட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும் நியாயவிலைக்கடை ஊழியர்களிடம் பிடிக்கப்படும் படி பணத்தில் சுமார் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது.

ஓரே தேசம், ஓரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் முன்பு பயோ மெட்ரிக் குடும்ப அட்டையை அமல்படுத்த வேண்டும். மேலும் மக்கள் விரும்பும் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சித்துறையில் துப்புரவுத் தொழிலாளர்கள், நீர் தேக்கத் தொட்டி பணியாளர்கள் ஆகியோருக்கு இதுநாள் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேட்டியின் போது தமின்மாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், கடலூர் மாவட்ட துணைத் தலைவர் கே.நடராஜன், நகர துணைத் தலைவர் பி.இளவரசன். எஸ்.யோகாஜா உள்ளிட்டோர் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments