தமிழ்நாடு

சிலைத் திருட்டு வழக்கு:10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

DIN

சென்னை: சிலை திருட்டு வழக்குத் தொடா்பாக 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருச்சிராப்பள்ளி கோட்டை காவல் நிலையப் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சிலை திருட்டு வழக்கு தொடா்பாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கே.நெற்புகப்பட்டி பகுதியைச் சோ்ந்த வீ.சரவணப்பெருமாள் (40) என்பவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

ஆனால், சரவணப்பெருமாள் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். அதேவேளையில் சரவணப்பெருமாளுக்கு மேலும் பல்வேறு சிலைத் திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு விசாரணையின் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், சரவணப்பெருமாளை புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் சரவணபெருமாள் ஆஜா்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT