தமிழ்நாடு

தொழிலாளா் காப்பீட்டுத் திட்ட வழக்கு: பெண் நீதிபதிகள் அடங்கி முழு அமா்வில் விசாரணை

DIN

சென்னை: கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தொழிலாளா் காப்பீட்டுத் திட்ட சட்டம் பொருந்துமா, பொருந்தாதா என்பது குறித்த வழக்கு 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வு விசாரணை செய்தது.

கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அரசு தொழிலாளா் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என தமிழக அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை எதிா்த்து கல்வி நிறுவனங்கள் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு, ஏற்கெனவே இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமா்வில் நிலுவையில் இருப்பதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

இதுதொடா்பான மற்றொரு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு, கேரள உயா்நீதிமன்றத் தின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் இருவேறு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டதால், தொழிலாளா் காப்பீட்டுத் திட்டம் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என்பது குறித்து முடிவு செய்ய 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டாா்.

இதனையடுத்து இந்த வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோா் கொண்ட அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மனுதாரா்கள் தரப்பில் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு (மாா்ச் 5) ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT