முகப்பு
விசாரணையை புறக்கணித்த விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட  அலுவலா்கள்.
தமிழ்நாடு

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் விவகாரம்: விசாரணையைப் புறக்கணித்த விவசாயிகள்

ருப்பூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் குழாய் பதிக்கும் விவகாரத்தில், விவசாயிகள் கோரிய ஆவணங்களை அதிகாரிகள் தராததால்,

தமிழ்நாடு

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் விவகாரம்: விசாரணையைப் புறக்கணித்த விவசாயிகள்

ருப்பூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் குழாய் பதிக்கும் விவகாரத்தில், விவசாயிகள் கோரிய ஆவணங்களை அதிகாரிகள் தராததால்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
விசாரணையை புறக்கணித்த விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட  அலுவலா்கள்.
பகிர்:

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் குழாய் பதிக்கும் விவகாரத்தில், விவசாயிகள் கோரிய ஆவணங்களை அதிகாரிகள் தராததால், திருப்பூரில் அறிவிக்கப்பட்ட விசாரணைக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனா்.

கோவை, இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு தேவனகுந்தி வரை பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு செல்லும் குழாய்களை விவசாய விளைநிலங்கள் வழியாகப் பதிப்பதற்கு ஐடிபிஎல் நிறுவனத்தினா் திட்டமிட்டு உள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள விவசாயிகளிடம், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆஜராகும்படியும் இருகூா் - தேவனகுந்தி குழாய் பதிப்புத் திட்ட அதிகாரம் பெற்ற அலுவலா், தனித் துணை ஆட்சியா் புஷ்பா அழைப்பு அனுப்பி இருந்தாா்.

அதன்படி, ஏராளமான விவசாயிகள் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்தனா். ஆனால் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தடுப்பரண்கள் அமைத்து காவல் துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா். விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகளை உள்ளே செல்ல அனுமதிக்காமல், அழைப்புக் கடிதம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் தனித்தனியாக உள்ளே செல்லலாம் என்று கூறினா். இதற்கு விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா்.

இதையடுத்து தனித் துணை ஆட்சியா் புஷ்பா மற்றும் திட்ட அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நுழைவாயிலில் இருந்த விவசாயிகளிடம் பேசினா். அப்போது, இந்தத் திட்டம் குறித்து ஏற்கெனவே தாங்கள் கேட்டிருந்த ஆவணங்களைத் தரும்படி விவசாயிகள் கூறினா். ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்புத் தெரிவித்து, இப்போது விசாரணை மட்டுமே நடைபெறும், உங்கள் கருத்துகள் பதிவு செய்யப்படும் என்று கூறினா்.

இதை ஏற்காத விவசாயிகள், தாங்கள் கேட்ட ஆவணங்களை வழங்கவில்லை என்பதை ஆட்சேப மனுவாகப் பதிவு செய்து அவரிடம் கொடுத்துவிட்டு விசாரணையைப் புறக்கணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →