முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில், ரூ.338. 76 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் தொடங்கி வைத்தார்.

பின்னர் ரூ.1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசுக் கட்டிடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ.134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். 

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் அஸ்வின்குமார், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமூக நலத் துறை அமைச்சர் வெ.சரோஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →