தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.33,088க்கு விற்பனை

DIN


சென்னையில் வியாழக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனோ வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி 25-க்குப் பிறகு 4 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமையான நேற்று ஒரே சவரனுக்கு ரூ.824 விலை உயா்ந்து ரூ.33,024-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

வியாழக்கிழமையான இன்று(மார்ச் 5) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.33,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.49.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.49,900 ஆகவும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,136

1 சவரன் தங்கம் ..................... 33,088

1 கிராம் வெள்ளி .................. 49.90

1 கிலோ வெள்ளி ................. 49,900

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,128

1 சவரன் தங்கம் ..................... 33,024

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி ................. 50,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT