கொலை வழக்கு: கூலித் தொழிலாளிக்கு ஆயுள்
சங்கரன்கோவில் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
தமிழ்நாடுகொலை வழக்கு: கூலித் தொழிலாளிக்கு ஆயுள்
சங்கரன்கோவில் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
சங்கரன்கோவில் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அருகேயுள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (31). கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 12ம் கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் கேரளாவிற்கு வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரது தந்தை கரிவலம் வந்த நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடிவந்தனர்.
இந்நிலையில், திருவேங்கடநாதபுரம் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தின் அருகில் முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுப்புலாபுரம் கீழத்தெருவை சேர்ந்த மரியதாஸ் மகன் முருகேசன் (37) கூலித்தொழிலாளி. வீராணபுரத்தை சேர்ந்த ராமர் மகன் முத்துக்குமரன்(30) இருவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நெல்லை 4வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். வழக்கு நடைபெற்று வந்தபோது, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முத்துக்குமரன் இறந்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு ஆயுள்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் துரை முத்துராஜ் ஆஜரானார்.