முகப்பு
தமிழ்நாடு

அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும்: முதல்வர் பழனிசாமி

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும்: முதல்வர் பழனிசாமி

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:


திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. 

அன்பழகன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்ட  இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான, பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ( 7.3.2020 ) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 1957--ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அடியெடுத்து வைத்தவர். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். 

இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →