முகப்பு
தமிழ்நாடு

அன்பழகன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 மார்ச், 2020 at 12:26 PM
பகிர்:

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களின் இரங்கல் செய்தியில், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், திமுக பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவரும், பன்முகத் திறமை கொண்டவருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவரின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.