கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடுகரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவையும் எட்டியுள்ளது.
இந்தியாவில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படட நிலையில் இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது.
இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சுகாதாரத் துறை, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் துறை அதிகாரிகள், வருவாயத் துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பொதுமக்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.