முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறை அருகே தலைகவசம், சாலை பாதுகாப்பு மற்றும் காவலன் செயலி விழிப்புணர்வு மாரத்தான் 

மணப்பாறை அருகே நடந்த மாரத்தான் போட்டியில் உலக மகளிர் தினத்தில் 12 வயது சிறுமி தனி ஒரு பெண்ணாக கலந்துகொண்டு ஆறுதல் பரிசுப் பெற்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:07 PM
பகிர்:

மணப்பாறை அருகே நடந்த மாரத்தான் போட்டியில் உலக மகளிர் தினத்தில் 12 வயது சிறுமி தனி ஒரு பெண்ணாக கலந்துகொண்டு ஆறுதல் பரிசுப் பெற்றார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையம் மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப் சார்பில் தலைகவசம், சாலை பாதுகாப்பு மற்றும் காவலன் செயலி விழிப்புணர்வு மாரத்தான் இன்று காலை நடைபெற்றது. வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் சூர்யா சுப்பிரமணியம், மணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

5 கிமீ தூரத்திற்குகான மாரத்தான் போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டனர். இதில் உலக மகளிர் தினத்தில் 12 வயது சிறுமி கோபிகா ஒற்றை பெண்ணாக கலந்துகொண்டார். அதேபோல் 9 வயது சிறுவன் நித்தீஸ் பெரியவர்களுக்கு இணையாக போட்டியில் ஓடினார். 

விராலிமலையை சேர்ந்த மலைச்சாமி முதல் பரிசு ரூ.2001/-யும், செல்வாராஜ் இரண்டாம் பரிசாக ரூ1501, திருச்சியை செர்ந்த லெனின் மூன்றாம் பரிசாக ரூ.1000/- என ரொக்க பரிசுகளும், காவல்துறை சார்பில் சான்றிதழ்களும் பெற்றனர். தனி ஒரு பெண்ணாக கலந்துகொண்ட கோபிகா மற்றும் சிறுவன் நித்தீஸ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →