சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றது.
பிப்ரவரி 25-க்குப் பிறகு, 4 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, விலை சற்று குறைந்திருந்தது.
அதன்படி, செவ்வாய்க்கிழமையான இன்று(மார்ச் 10) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.33,723-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.4,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.50.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.50,000 ஆகவும் விற்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 4,216
1 சவரன் தங்கம் ..................... 33,728
1 கிராம் வெள்ளி .................. 50.00
1 கிலோ வெள்ளி ................. 50,000
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 4,181
1 சவரன் தங்கம் ..................... 33,448
1 கிராம் வெள்ளி .................. 49.50
1 கிலோ வெள்ளி ................. 49,500