முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடி குறைவு 

சென்னையில் புதன்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்துள்ளது. 

தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடி குறைவு 

சென்னையில் புதன்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

சென்னையில் புதன்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்துள்ளது. 

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது.

பிப்ரவரி 25-க்குப் பிறகு, 4 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.4,164-க்கு விற்பனையானது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.49,500 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,164

1 சவரன் தங்கம் ..................... 33,312

1 கிராம் வெள்ளி .................. 49.50

1 கிலோ வெள்ளி ................. 49,500

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,214

1 சவரன் தங்கம் ..................... 33,712

1 கிராம் வெள்ளி .................. 50.30

1 கிலோ வெள்ளி ................. 50,300

முழு கட்டுரையைப் படிக்க →