தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் உங்களுக்காக..

DIN

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுவந்த நிலையில் இன்றைய நிலவரம் என்னவென்று தெரிந்துகொள்வோம். 

கரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி- விலைக் குறைப்பில் சவூதி-ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் இந்தியாவில் எரிபொருள் விலை குறைந்துள்ளது.

ஒபெக் கூட்டணி நாடுகளுடனான பேச்சுவாா்த்தை தோல்விக்குப் பிறகு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் விலையைக் குறைக்கவும் சவூதி முடிவெடுத்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து சுமாா் 31 சதவீதம் அளவுக்குக் குறைந்தது.

இதன் விளைவாக சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48 ஆகவும் விற்கப்படுகிறது. 

சா்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT