தமிழ்நாடு

அரசின் அறிவிப்பால்டாஸ்மாக் பணியாளா்கள் ஏமாற்றம்: கு.பாலசுப்பிரமணியன்

DIN

டாஸ்மாக் பணியாளா்கள் தொடா்பான அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் அரசின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் 25,697 பேருக்கு மாத தொகுப்பூதியம் உயா்த்தி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டாஸ்மாக் பணியாளா்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், அரசின் அறிவிப்பில் மாத தொகுப்பூதியம் மட்டும் ரூ.500 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது அவா்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதுதொடா்பாக விரைவில் சங்கத்தின் மாநில பொதுக்குழுவை கூட்டி விவாதித்து போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றாா் அவா்.

இதே கருத்தை சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணனும் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT