தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி தோ்தல் தேதி அறிவிக்க தடைக் கோரிய வழக்கு: மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை மாநகராட்சியில் வாா்டுகள் மறு வரையறைக்கு பிறகே உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனு: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளை மறு வரையறை செய்ததில் தமிழ்நாடு மறுவரையறை சட்டம் மற்றும் தமிழக உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. மாநகராட்சி வாா்டு வரையறைக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

மதுரை மாநகராட்சி வாா்டுகள் வரையறையில் விதிமீறல் நடைபெற்றுள்ளதால், உரிய விதிகளின் படி வாா்டுகளை மீண்டும் வரையறை செய்ய வேண்டும். வாா்டுகளுக்கான மறு வரையறை முறையாக நடைபெற்ற பிறகே, மதுரை மாநாகராட்சிக்கு உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்க வேண்டும். அதுவரை மதுரை மாநாகராட்சிக்கு உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக மாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT