முகப்பு
தமிழ்நாடு

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள்: விரைந்து மீட்ட கடலோரக் காவல்படை

தூத்துக்குடி திரேஸ்புரம் பெர்க்மான்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 5 மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

தூத்துக்குடி திரேஸ்புரம் பெர்க்மான்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 5 மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதி நடுக்கடலில் சென்றபோது அதிக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகில் ஓட்டை விழுந்து படகு கடலில் மூழ்கி உள்ளது.

இந்த நிலையில் கடலோர காவல்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களும் பத்திரமாக மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.