தமிழ்நாடு

மணப்பாறை: கரோனா மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

DIN

மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், விழிப்புணர்வு பிரசாரங்களிலும் அரசு போர்கால அடிப்படையில் செயல்பாடுகளை செய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து நோய் குறித்த விழிப்புணர்வை அடிப்படை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அரசு தரப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 

முன்னதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரிஸ்வான பர்வீன் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து காமராஜர் சிலை அருகில் உள்ள அரசினர் பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், காவல் ஆய்வாளர்கள் கண்ணதாசன், பாண்டிவேலு ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

பேரணி கோவில்பட்டி ரோடு, புதுத்தெரு, பேருந்து நிலையம், பெரியார் சிலை திடல், திண்டுக்கல் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நொச்சிமேடு பகுதியில் நிறைவுபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் சீருடை அணிந்தும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகக் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT