முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு: துள்ளிக் குதித்த காளையின் கால்கள் முறிவு

தஞ்சாவூர் அருகே பூக்கொல்லையில்  ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

தஞ்சாவூர் அருகே பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

களத்தில் விடுவதற்காக சுமார் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. 

காளைகளைப் பிடிப்பதற்காக 417 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் கட்டமாக இவர்களில் 75 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாலை வரை நடைபெறவுள்ள இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர். திரண்டுள்ளனர். 

இந்த போட்டியின்போது, வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு காளை மிரண்டு போய் குதித்தது. இதனால், காளையின் முன் கால்கள் இரண்டும் முறிந்தன. இதனால் அக்காளையால் எழுந்து ஓட முடியவில்லை. காளைக்கு கால்நடை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, இக்காளை அவசர ஊர்தி மூலம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →