தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

DIN

சென்னையில் திங்கள் கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமையான இன்று(மார்ச் 16) 22 கிராம் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.31,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.28 குறைந்து, ரூ.3,962-க்கு விற்பனையானது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.43.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

தங்கம் விலை குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக பிரிவு துணைத் தலைவா் சாந்தக்குமாா் கூறியது:

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக நாடுகளில் அனைத்து வா்த்தகமும் பெரிதும் தடைப்பட்டுள்ளது. பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. பல நாடுகளில் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்படுவதால், தொழில் குறியீடு குறைந்துள்ளது. இதனால், தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, சா்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்தது. அடுத்த இரண்டு நாள்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தங்கம் விலை மீண்டும் உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

திங்கள் கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,962

1 சவரன் தங்கம் ..................... 31,696

1 கிராம் வெள்ளி .................. 43.20

1 கிலோ வெள்ளி ................. 43,200

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,934

1 சவரன் தங்கம் ..................... 31,472

1 கிராம் வெள்ளி .................. 44.00

1 கிலோ வெள்ளி ................. 44,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT