தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள்கூடும் இடங்கள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டன. இந்தியாவில் இந்த வைரஸுக்கு இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தொற்று நோய்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழக அரசு மருத்துவர்களிடம் உள்ளது. தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.