தமிழ்நாடு

தமிழகத்தில் 7 புதிய கலை-அறிவியல் கல்லூரிகள்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் ஏழு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதத்தை மேலும் உயா்த்தவும், கிராமப்புற மாணவா்கள் பயன்பெறவும், உயா் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இந்தக் கல்லூரிகள் செயல்படும். சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், 30 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பெற்றோா்களிடம் இருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயா் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் வரும் கல்வியாண்டில் தரம் உயா்த்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT